Print this page

2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 13)

1_E.png

நான் என் நாவைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உங்கள் நாக்கை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுதல் அவசியம்.

"அது எனக்குத் தெரியாது" என்று நீங்கள் கூறலாம்.

"என் வாயில் ஒரு அற்புதம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை."

"என் நாவில் நல்ல நாட்கள் இருப்பதை நான் அறிந்திருக்கவில்லை."

நான் அதை நம்பவேயில்லை.

"நான் என்ன வேண்டுமானாலும் பேசிக்கொண்டு ஆசீர்வாதத்தையும் அனுபவிக்க முடியும்" என்று நினைத்தேன்.

அது உங்கள் வீட்டு முற்றத்தில் சில நல்ல செடிகள் வேண்டும் என்று எதிர்பார்த்தாலும், தீய விதைகளை விதைத்து, நல்ல செடிகளை எதிர்பார்க்கிற மாதிரியான ஒரு செயற்பாடாகும்.

எனவே காட்டு செடிகளை தொடர்ந்து நட்டால் அதே அறுவடை தான் கிடைக்கும்.

"நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன்; நான் மோசம்போயிருக்கிறேன்; யாரும் என்னை நேசிக்கவில்லை; யாரும் என்னைக் கவனிப்பதில்லை."

"யாரும் என்னை நேசிப்பதில்லை; யாரும் என்னை அழைப்பதில்லை; யாரும் என்னைப் பார்ப்பதில்லை. நான் எல்லா நேரங்களிலும் தனியாகவே வாழுகிறேன்."

இவை சத்துரு உங்களிடம் கூறுகிற மிகப் பெரியப் பொய்யாகும்."நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை" என்று இயேசு கூறியிருப்பதால், நீங்கள் தனியாக இருக்கிறீர்கள் என்று எப்படி கூறுவீர்கள்?

உங்கள் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்துவது தேவன் அல்ல, உங்கள் நாவே உங்கள் எதிர்காலத்தை கட்டுப்படுத்துகிறது.

உங்கள் நாவே உங்கள் எதிர்காலத்தை தாங்குகிறது.

இயேசுவை உங்கள் வாழ்வின் ஆண்டவராக எப்படி ஏற்றுக்கொள்கிறீர்கள்? நீங்கள் உங்கள் இதயத்தில் விசுவாசித்து உங்கள் வாயால் அறிக்கை செய்தீர்கள்.

அதேபோல், உங்கள் வாழ்க்கைக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சுகத்தை எப்படி விசுவாசிக்கின்றீர்கள்? உங்கள் இதயத்தால் விசுவாசித்து, உங்கள் வாயால் அறிக்கை செய்வதன் மூலமாகும்.

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#862)]

Read 993 times