கர்த்தர் உங்கள் மேய்ப்பராயிருக்கிறார் (பகுதி 2)
தேவன் தாமே தம்முடைய மகத்தான பொக்கிஷமாகிய அவருடைய குமாரனைப் பரிசாகக் கொடுத்ததன் மூலமாக அவருடைய அன்பை நிரூபித்திருக்கிறார் தேவன் நம் அனைவருக்கும் பலியாக அவரைத் தாராளமாகச் செலுத்தியதால், அவர் நமக்கு வழங்க வேண்டியதை வழங்காமலிருக்க மாட்டார். ரோமர் 8:32
உங்களில் கிரியை நடப்பித்து காரியங்களை நிறைவேற்றும் தேவனின் வல்லமையை ஒருபோதும் சந்தேகிக்காதீர்கள்.
அவர் உங்களின் பாரிய வேண்டுதல்களையும் விட, உங்கள் நம்பமுடியாத கனவை விடவும், உங்கள் கற்பனை செய்யும் அனைத்தையும் விட அவர் அதிகமாய் செய்கிறவராக இருக்கிறார். ஏனென்றால் அவருடைய அற்புத சக்தி உங்களை தொடர்ந்து உற்சாகப்படுத்துகிறது. எபேசியர் 3:20
ஆம், தேவன் சகலவிதமான கிருபைகளாலும் உங்களை நிரப்பத் தயாராக இருக்கிறார், அதனால் நீங்கள் யாவற்றையும் போதுமானதை விட அதிகமாகப் பெறுவீர்கள்—ஒவ்வொரு கணமும் எல்லா வகையிலும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியத்திலும் அவர் உங்களை மிகுதியாகப் பெருகச் செய்வார். 2 கொரிந்தியர் 9:8.
“ஆண்டவர் என்னிடம் பேசுவதில்லை” என்று ஒருபோதும் கூறாதீர்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களுடன் தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டார் என்ற சாத்தானின் பொய்யை ஒருபோதும் நம்பாதீர்கள்.
அவர் உங்கள் நல்ல மேய்ப்பர், நீங்கள் அவருடைய ஆடுகள். என் ஆடுகள் என் குரலைக் கேட்கின்றன, நான் அவற்றை அறிவேன், அவைகள் என்னைப் பின்பற்றும் என்றார் இயேசு. யோவான் 10:27
தேவனின் குரல் மற்றும் அவருடைய வழிகாட்டுதலைக் கேட்க கூடாதபடிக்கு நீங்கள் பேதைகள் என்று நினைக்காதீர்கள்.
செம்மறி ஆடுகள் தங்கள் மேய்ப்பனுக்கு அமைதியாக செவி கொடுக்கின்றன. அவைகள் பரபரப்படையாமல், அவருடைய சத்தத்தைக் கேட்டு, அவரைப் பின்பற்றிச் செல்லுகின்றன.
தேவனுடைய சித்தம் என்னவென்றால், அவருடைய மக்கள் இனி பயப்படவோ அல்லது திகைக்கவோ கூடாது- இதயம் நொந்து, ஊக்கமிழந்து, குழம்பித் தவிக்கக் கூடாது என்பதாகும்.
அவர்கள் தேவனுடைய மக்களை அறிவுடனும் புரிதலுடனும் போஷிக்கப்பட கூடுமான வகையில், தேவன் தாமே தமது சித்தத்தின்படி மேய்ப்பர்களை நியமிப்பதற்கு இதுவே காரணம்.
சமாதானத்தின் தேவன் தம்முடைய நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தின் மூலம் நமது பெரிய மேய்ப்பரை உயிர்த்தெழுப்பினார். எபிரெயர் 13:20
சகல தீங்குகளிலிருந்தும் ஆபத்திலிருந்தும் பாதுகாப்புப் பெறுவதற்காக இயேசுவின் நித்திய இரத்த உடன்படிக்கையில் விசுவாசம் வைப்போம்!
விசுவாசிகளின் ஐக்கியம்
_____________________
►https://www.believersfellowship.lk
►https://youtube.com/c/BelieversFellowshipLK
►https://www.facebook.com/BelieversFellowshipLk/
►ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195
நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி வேதாகம பாடங்களை" பெற விரும்பினால்,
Follow the Believers Fellowship English channel on WhatsApp:
https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u
மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச் சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.
[#8)]