2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 21)
யாரோ ஒருவர் சுவிசேஷம் கூறியவர்களை நீங்கள் சந்திப்பீர்கள், அவர்கள் உங்களிடம் வரப் போகிறார்கள், அப்பொழுது நீங்கள் அவர்களைக் இரட்சிப்பிற்குள் வழிநடத்தப் போகிறீர்கள்.
ஒருவர் நடுவார், மற்றொருவர் தண்ணீர் பாய்ச்சுவார், இன்னொருவர் அறுவடையைப் பெறுவார்.
சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டது, விதைக்கு தண்ணீர் பாய்ச்சுக் கொண்டிருக்கப்பட்டது, ஆனால் இந்த ஆண்டு நாம் அறுவடை செய்யப் போகிறோம்.
இவ்விதமான இரட்சிப்புக்காக தேவனின் வீடு மகிழ்வதாக!
ஆண்டவரின் இல்லத்தில் மகிழ்ச்சி நிலவட்டும்!
ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக நாம் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியடைவோமாக!
அதுவே தேவனுடைய இதயம், அதுவே தேவனுடைய இதயமாக இருக்கப்போகிறது.
"தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்." (யோவான் 3:16)
இவை அனைத்தையும் ஒன்றாக இணைத்துக் கொள்ளுவோம், அப்போது நாங்கள் எங்கள் இதயங்களில் விசுவாசித்து எங்கள் வாயால் அறிக்கையிடுகிறவர்களாக இருப்போம்.
ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன், "பாரிய மனந்திரும்புதல் மற்றும் பாரிய மறுசீரமைப்புகள் நடைப் பெறுகிறது" என அறிக்கையிடுங்கள்.
நாம் எழுந்து நின்று அவருக்கு நன்றி செலுத்துவோம்.
ஸ்தோத்திரம் இயேசுவே! நன்றி இயேசுவே! கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்; ஆண்டவரே, பாரிய மனந்திரும்புதல் என்றும் பாரிய மறுசீரமைப்புக்கள் என்றும் நாங்கள் அறிக்கையிடுகிறோம்.
இந்த வருடத்தை பாரிய மனந்திரும்புதல் மற்றும் பாரிய மறுசீரமைப்புகளின் ஆண்டு என அறிக்கையிடுகிறோம்.
சபையும் கூட அதன் கட்டமைப்பையும், நடந்து கொண்டிருக்கும் விதத்தையும் மாற்றப் போகிறது.
சபைகளில் எழுப்புதல் வரப்போவதை நாம் காணப் போகிறோம், மக்கள் முற்றிலும் மாறப் போகிறார்கள்.
விசுவாசிகளின் ஐக்கியம்
_____________________
►https://www.believersfellowship.lk
►https://youtube.com/c/BelieversFellowshipLK
►https://www.facebook.com/BelieversFellowshipLk/
►ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195
நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி வேதாகம பாடங்களை" பெற விரும்பினால்,
Follow the Believers Fellowship English channel on WhatsApp:
https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u
மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச் சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.
[#870)]