+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

புயல்களுக்கு மத்தியில் "அமைதியைப்" (சமாதானத்தைப்) பேசுங்கள்!

1_E.png

அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: "இரையாதே, அமைதலாயிரு" என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதலுண்டாயிற்று. மாற்கு 4:39

நீங்கள் எங்கிருந்தாலும், நீங்கள் எவ்விதமான அனுபவங்களைக் கடந்துச் சென்றாலும் கர்த்தர் உங்களோடு கூட இருக்கிறார்.

உங்கள் நிலைமை அல்லது அதன் தன்மை எப்படி இருக்கிறது என்பது முக்கியமல்ல.

உங்கள் சூழ்நிலைகள் ஒரு வாழும் நரகமாகத் தோன்றலாம், ஆனாலும் நீங்கள் தேவன் மீதும் அவர் உங்களுக்காகச் செய்திருக்கும் அற்புதமான காரியங்கள் மீதும் கவனம் செலுத்தினால், அவைகள் மத்தியில் நீங்கள் மகிழ்ச்சியையும் அமைதியையும் காணலாம்.

தேவனுடைய வார்த்தையானது நமக்கு ஆயிரக்கணக்கான வாக்குத்தத்தங்களை அளித்துள்ளது.

வேதாகமத்திலுள்ள சில பரிசுத்தவான்கள் எவ்வாறு சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்தினார்கள் என்பதையும் ஆபத்தான சூழ்நிலைகளுக்கு மத்தியில் அவர்கள் எவ்வாறு மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் அவற்றை மேற்கொண்டார்கள் என்பதைக் குறித்த அனுபவங்களையும் நாம் காணக் கூடியதாகவுள்ளது.

நீங்கள் நேர்மையானவராக இருந்தால், உங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பாருங்கள்.

உங்களால் எதுவும் செய்ய கூடாதிருந்தாலும், தீர்மானங்களை எடுக்க முடியாதிருந்தாலும், நீங்கள் திரும்பிப் பார்க்கும்போது, உங்களைச் சுற்றிலும் உள்ள காரியங்கள் அதுவாகவே இடிந்து வீழ்கிறதைப் போல் தோன்றினாலும், நீங்கள் தேவன் பக்கமாகத் திரும்பி அவரை நோக்கிக் கூப்பிடுகையில், எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக எப்படி காத்துக்கொண்டது என்பதை நினைவிற் கொள்ளுங்கள். நன்றி தெரிவியுங்கள்.

நீங்கள் வாழ்க்கையில் ஒரு போராட்டத்தில் ஈடுபடுகிறதினாலேயோ அல்லது ஒரு புயலால் உங்கள் நிலை அசைக்கப்பட்டதாலோ உங்கள் வாழ்க்கைக்கான தேவனின் நோக்கமும் திட்டமும் மாறப் போவதில்லை.

வார்த்தைக்கு ஏற்ப மீள் நிலைப்பட்டு, பரிசுத்த ஆவியானவரால் நீங்கள் செய்ய அறிவுறுத்தப்பட்ட காரியங்களைச் செய்யுங்கள்.

வெவ்வேறு திசைகளில் இழுக்கப்படாதீர்கள் அல்லது எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்.

தினசரி ஜெபத்தில் செறிவூட்டப்பட்டவர்களாக, நிரம்பி வழியும் நன்றியுணர்வோடு உங்கள் விசுவாசம் நிறைந்த கோரிக்கைகளை தேவனுக்கு முன்பாக ஒப்படையுங்கள்.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு விவகாரத்தையும் தேவனிடம் கூறுங்கள், அப்போது எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். பிலிப்பியர் 4:6-7

இயேசுவாகிய சமாதானத்தின் தேவன் தாமே உங்களோடு இருப்பாராக!

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

► www.believersfellowship.lk

https://youtube.com/c/BelieversFellowshipLK

https://www.facebook.com/BelieversFellowshipLk/

?  ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp: 

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#3)]

Read 170 times