+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

விசுவாசத்தில் திடமாக இருங்கள்! (பகுதி 1)

1_E.png

ஏசாயா 51:2 ல் கர்த்தர் கூறுகிறார், " உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன்.."

ஆபிரகாம் மெய்யாகவே"விசுவாசத்தின் தந்தை" என்று தேவனுடைய வார்த்தை கூறுகிறது. காரணம்

விசுவாசிக்கிற அனைவருக்கும் தந்தை ஆவதற்கு தகுதியைப் பெற்றார்.

இப்போது ஆபிரகாம் எப்படி நமது விசுவாசத்தின் தந்தை ஆனார் என்று பார்ப்போம்.

கர்த்தருடைய வார்த்தை ஆபிரகாமுக்கு வந்தது, "உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான்"என்று கூறினார். ஆதியாகமம் 15:4

சகல முரண்பாடுகள் மத்தியில், அது நம்பிக்கையற்றதாகத் தோன்றினாலும், ஆபிரகாம் வாக்குத்தத்தத்தை விசுவாசித்தார். மற்றும் கர்த்தர் அதை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்த்தார்.

அவர் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசித்ததன் விளைவாக அவர் ஜாதிகளின் பிதாவாகினார்.

அவரைப் பற்றிய  தேவனுடைய அறிவிப்பு நிறைவேறியது: "உன் சந்ததியினர் எண்ண முடியாத அளவுக்கு அதிகமாக இருப்பார்கள்!" ரோமர் 4:18

ஆபிரகாம் கர்த்தரின் வாக்குத்தத்தத்தை விசுவாசிப்பதை ஒருபோதும் நிறுத்தவில்லை, ஏனென்றால் அவர் ஒரு பிள்ளைக்குத் தகப்பனாகும்படியாக அவருடைய விசுவாசம் பலப்படுத்தப்பட்டது.

மேலும் அவர் விசுவாசத்தில் வல்லவராக இருந்ததாலும், அவருடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து வல்லமையும் கர்த்தருக்கு உண்டு என்பதை உறுதியாக நம்பியபடியால், ஆபிரகாம் தேவனை மகிமைப்படுத்தினார்! ரோமர் 4:20-21

வாக்குத்தத்தத்தின்மகன் வெளிப்படுவதைக் காண்பதற்கு முன்பே, அவர்  தேவன் மீது விசுவாசம் கொண்டார்.

அவர்  தேவனுடைய வார்த்தைகளை விசுவாசித்ததால், அவருடைய விசுவாசமானது தேவனுடைய நீதியை அவருடைய கணக்கிற்கு மாற்றச் செய்தது.

எளிமையாகச் சொன்னால்,  தேவன் தாமே தனது ஜெபத்திற்குப் பதில் அளிப்பதற்கு முன்பதாக, அவருடைய இருதயத்தில் எந்த சந்தேகமும் கொள்ளாமல் விசுவாசத்தால் அது நடந்தேகும் என்று தேவனுக்கு  நன்றி தெரிவித்தார்.

ஆபிரகாம் ஜாதிகளின் பிதாவாக மாறக் காரணம், விசுவாசிக்க கூடாதிருந்த சமயத்திலும் அவர் விசுவாசித்தப்படியாலாகும்

வாக்குத்தத்தத்தை நிறைவேற்றும் அனைத்து சக்தியும் தேவனுக்கு உண்டு என்பதை அவர் உறுதியாக நம்பினார்.

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

► www.believersfellowship.lk

https://youtube.com/c/BelieversFellowshipLK

https://www.facebook.com/BelieversFellowshipLk/

?  ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp: 

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#9)]

Read 162 times