+94722340440 | 0112719730 | 2nd Floor, 28 Galle Road, Dehiwala South. Sri Lanka.

2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 1)

1_E.png

கர்த்தர் உங்கள் வாழ்க்கையை மென் மேலும் அதிகரிக்கச் செய்ய விரும்புகிறார்.

நம் வாழ்வில் நடக்கும் அனைத்தும் அவர் சொன்னதின்படியே ஆகிறது.

நாம் அவர் கூறிய வார்த்தைகளைப் பெறும்போது, ​​நாம் வாழ்க்கையில் அதிகரிப்பு நடக்கப் போகிறது.

நம் வாழ்வில் மகத்துவமான காரியங்கள் நடப்பதை நாம் பார்க்கப் போகிறோம்.

"ஆண்டவரே, நீர் என் வாழ்க்கையில் என்ன செய்கிறீர்?" எனும் வினா நம் மனதில் ஒவ்வொரு முறையும் எழலாம்.

சரி, அவர் உங்கள் வாழ்க்கையில் கிரியைச் செய்கிறார், அவர் உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல வேலையைச் செய்கிறார்.

அவர் உங்கள் வாழ்க்கையை அழிக்க மாட்டார்.

அவர் கூறுவதென்னவெனில், "உனக்காக நான் வைத்திருக்கும்  யோசனைகள் மற்றும் சமாதனத்தற்கான யோசனைகளாகும், அவை அழிவின் யோசனைகள் அல்ல."

உங்களுக்காக சிறந்ததைச் செய்ய அவர் எப்போதும் தயாராக இருக்கிறார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.

சகல நல்ல காரியமும் நமது பரலோகத் தந்தையிடமிருந்து வருகிறது.

அவரண்டையில் நமக்குக் கொடுக்க எந்தத் தீமையும் இல்லை; அவர் நமக்காக வழங்க நல்ல காரியங்களை மட்டுமே  கொண்டுள்ளார்.

தீமையான சகல காரியங்களும் பிசாசிடமிருந்தே வருகிறது; அவைகள் ஒருபோதும் பரிசாகவே இராது, ஆனால் தேவனோ நமக்கு நல்ல ஈவுகளைத் தருகிறார்.

உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்கும் என்று விசுவாசியுங்கள்.

மேலும், "அதிகதிகமாக மனந்திரும்புதலின் ஆண்டு வந்துவிட்டது எனவும் அதிகதிகமாக மறுசீரமைப்புகள் நடைபெறப் போகின்றன" எனக் கூறும் தேவாவியானவரின் குரலை நான் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதை நான் விசுவாசிக்கிறேன்.

மனந்திரும்புதல் இருப்பின் அந்த இடத்தில், மறுசீரமைப்பு இருக்கும்.

மனந்திரும்புதல் எனும்போது அதன் சரியான விளக்கத்தை நாம் அறிந்திருப்பது அவசியம். அதாவது, "உங்கள் சிந்தனை முறையை மாற்றுவது, உங்கள் வாழ்க்கையில் சூழவுள்ள காரியங்களிலிருந்து விலக வேண்டும் மற்றும் தேவனுடைய வழிகாட்டுதலைத் தேடத் தொடங்குவது" என்பதை நாம் அறிந்து கொள்வது முக்கியமான காரணிகளில் ஒன்றாகும்.

BELIEVERS’ FELLOWSHIP

_______________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#847)]

Read 2715 times