+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

Believers' Fellowship

Believers' Fellowship

இந்த முழு பிரபஞ்சத்தையும் சிருஷ்டித்த  தேவன் உங்களிடம் இவ்வாறு கூறுகிறார்: ‘ஜெபத்தின் மூலம் என்னை  நோக்கிக் கூப்பிடுங்கள், நான் உங்களுக்கு பதிலளிப்பேன். நீங்கள் இன்னும் அறியாத பெரிய மற்றும் வலிமையான விஷயங்களை நான் உங்களுக்குக் காட்டுவேன். எரேமியா 33:3

உங்கள் மனதில் இருக்கும் கேள்விகளுக்கு பதில் தேவையா? உங்களுக்கு தேவையான அனைத்து பதில்களும் என்னிடம் உள்ளன என தேவன் கூறுகிறார். நீங்கள் அவரை அழைக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.  

வார்த்தை இவ்வாறு கூறுகிறது, "தீமையால்  தோற்கடிக்கப்படாமல், தீமையை நன்மையால் வெல்லுங்கள்."

நல்ல சிந்தனையைக் கொண்டும், நல்ல குணாதிசயங்களைக் கொண்டும் உங்கள் மனதையும் இதயத்தையும் நிரப்புங்கள்.

மத்தேயு 15:11 ல், "ஒரு மனிதனின் இதயம் அவனது வார்த்தைகளால் தீட்டுப்படுத்தப்படுகிறதாக" இயேசு நாதர் மொழிந்தருனார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்களைத் தீட்டுப்படுத்துவது நீங்கள் உண்ணும் உணவு அல்ல,நீங்கள் கூறும் வார்த்தைகளாகும்.