+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

Believers' Fellowship

Believers' Fellowship

சங்கீதம் 23:1 கூறுகிறது, "கர்த்தர் என் மேய்ப்பனாயிருக்கிறார் நான் தாழ்ச்சியடையேன்."

கர்த்தர் உங்கள் மேய்ப்பராகவும் உங்கள் சிறந்த நண்பராகவும் இருக்கும்போது, உங்களுக்கு எப்போதும் போதுமானதை விட அதிகமாக இருக்கும். அவர் உங்களைப் போஷிப்பார், உங்களை வழி நடத்தி, உங்களைப் பாதுகாப்பார், ஏனென்றால் அவர் எப்போதும் உங்களுக்காக இருக்கிறார்.

இயேசு சகல விசுவாசிகளுடனும் இரத்தத்தினாலாகிய உடன்படிக்கையைச் செய்தார்.  நாம் இந்த உடன்படிக்கையின் மக்களாக இருப்பதால், அவர் நம்மைப் பாதுகாப்பதாக வாக்களித்துள்ளார்.  எனவே, "ஆண்டவரே, இந்த உடன்படிக்கையில் உள்ள ஒவ்வொரு வாக்குறுதியும் நமக்குச் சொந்தமானது" எனக் கூறுவோம்.

கர்த்தர் உங்களை நித்திய அன்பினால் நேசிக்கிறார் என்பதை அவருடைய வார்த்தை கூறுகிறது. மேலும் அவர் தம்முடைய மாறாத அன்பான இரக்கத்தால் உங்களைத் தம்மிடம் ஈர்த்துக்கொண்டார். எரேமியா 31:3 அவர் உங்களை அளவுக்கதிகமாய் நேசிப்பதை முன்னிட்டு, கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரத்தத்தால், பழுதற்ற, கறையற்ற ஒரு பலியாட்டுக்குட்டியின் இரத்தத்தால் அவர் உங்களை விலைக்கு வாங்கினார். ஏனென்றால், நீங்கள் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தையின் அழியாத நித்திய விதையின் மூலமாக, மறுபடியும் பிறந்திருக்கிறீர்கள்.